பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்: 56 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அனுமதி…!!

24 February 2021, 10:06 am
pm house scheme - updatenews360
Quick Share

புதுடெல்லி: பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 368 புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 53வது மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் 11 மாநிலங்கள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் 56 ஆயிரத்து 368 புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

திட்டத்தின் குறிப்பிட்ட கால வரையறைக்குள் 100 சதவீதம் நிறைவு செய்து, வீடுகளை தகுதிவாய்ந்த திட்ட பயனாளிகளுக்கு வழங்கி விட வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஷ்ரா கேட்டுக்கொண்டார்.

Views: - 10

0

0