தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை கோரிய மனு : இன்று தீர்ப்பு!!

9 November 2020, 9:50 am
crackers - Updatenews360
Quick Share

தமிழகம், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட 23 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிப்பது தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை கோரி பல்வேறு மனுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு ஏற்கனவே பட்டாசு விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதற்கும் தடை செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையில், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநிலங்களின் தலைமை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையல் அனைத்து மாநிலங்களும் எழுத்து பூர்வமான பதில்களை தாக்கல் செய்துள்ள நிலையல் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு இன்று வழங்க உள்ளது.

Views: - 32

0

0