பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திரிணாமூல் காங்., போராட்டம் அறிவிப்பு

6 July 2021, 11:00 am
mamata - petrol bunk - updatenews360
Quick Share

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தப்போவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகின்றனர். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 10,11 ஆகிய தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட போவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Views: - 195

0

0