இனி உதவி பேராசிரியர் பணிக்கு Ph.D கட்டாயமில்லை: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யுஜிசி..!!

Author: Aarthi Sivakumar
13 October 2021, 10:48 am
Quick Share

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023ம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு 2021ம் ஆண்டு முதல் பிஎச்டி படிப்பு கட்டாயம் என்கிற நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2018ம் ஆண்டு கொண்டுவந்தது.

பேராசிரியர் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் சேரும் நபர்களின் தகுதியை உயர்த்தும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. நடப்பாண்டின் ஜூலை மாதத்திலேயே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், அது அமல்படுத்தப்படவில்லை.

தற்போது கொரொனோ பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு முதல் உதவிபேராசியர் பணியிடத்துக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என்னும் நடைமுறையில் பல்கலைக்கழக மானியக் குழு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு வருகின்ற 2023ம் ஆண்டு வரை பிஎச்டி கட்டாயம் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Views: - 352

0

0