7ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகிறது இந்திய-சீன ராணுவம்…!!!

Author: Aarthi
5 October 2020, 8:57 am
Quick Share

எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்தியா – சீனா ராணுவத்தின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இருநாட்டு ராணுவத்திற்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்தது.

இதனால், பதற்றத்தை தணிக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வரும் அக்டோபா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

Views: - 46

0

0