“தொலைபேசி அழைப்பை ஒட்டு கேட்கிறார்கள்” – ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது சந்திரபாபு நாயுடு புகார்..!

17 August 2020, 12:23 pm
Quick Share

சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் அரசியல் போர் நடந்து வருகிறது. பொது இடங்கள், செய்தியாளர் சந்திப்பு என அனைத்து இடங்களிலும் அரசியல் காழ்புணர்ச்சி பிரதிபலிக்கப்படுவதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரமத் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சிகள், பத்திரிக்கை துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த ஆட்சியில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம், அரசு பணியாளர் தேர்வாணையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது எதிர்க்கட்சி தலைவர்கள், வக்கீல்கள், ஊடகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மிரட்டி வருவதாகவும், குறிப்பாக எதிர்க்கட்சிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதிவு செய்து ஒட்டுக்கேட்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தெடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கா முன்வைக்கப்பட்டுள்ளது.

Views: - 28

0

0