ஹத்ராஸ் சம்பவம் மூலம் வன்முறைக்கு சதித்திட்டம்..! அள்ளி இறைக்கப்படும் வெளிநாட்டுப் பணம்..!

By: Sekar
6 October 2020, 11:33 am
Hathras_Protest_UpdateNews360
Quick Share

ஹத்ராஸ் பாலியல் பலாத்கார வழக்கின் மூலம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவிருந்த சதித்திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறையின் உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

அதன்படி சாதியை முன்வைத்து கலவரத்தைத் தூண்டுவதற்கும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசாங்கத்தின் பிம்பத்தை இழிவுபடுத்துவதற்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது அம்பலமாகியுள்ளது. .

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் உள்ளன. அதிலும் குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 37% உயர்ந்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மற்ற குற்றங்களை வேடிக்கை மட்டுமே பார்த்த வெளிநாட்டு நிதிகளின் மூலம் இயங்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளும், காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் திடீரென இந்த விவகாரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. 

சமீபத்தில் ராஜஸ்தானில் இதே போல் ஒரு இளம் பெண் ஒரு மாதம் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு தப்பி வந்த நிலையில், குற்றவாளிகள் கைது கூட செய்யப்படாமல் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். 

அதைப் போல் அல்லாமல் ஹத்ராஸ் விவகாரத்தில் குற்றமிழைத்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது சந்தேகங்களை ஏற்படுத்தியது 

இந்நிலையில் அமெரிக்காவில் இனவெறிப் போராட்டங்களை தூண்டியதைப் போல், இங்கும் சாதி வெறியைத் தூண்டி, இந்தியாவை வன்முறைக்காடாக மாற்ற கோடிக்கணக்கில் வெளிநாட்டு நிதி புழங்குவதை மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் கண்டுபிடித்துள்ளன.

இதற்கான சதியில் ஈடுபட்ட அமைப்புகள் Justiceforhathrasvictim.carrd.co  எனும் இணையதளம் மூலம் போராட்டங்களில் சேர மேலும் மேலும் மக்களை வலியுறுத்துகிறது. பாதுகாப்பாக எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் போலீசாரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பது எப்படி என்பது பற்றிய தகவல்களையும் இந்த வலைதளம் பரப்பியது.

கலவரத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றின் ஒரு பகுதியாக, கண்ணீர்ப்புகைக் குண்டுவெடிப்பு மற்றும் கைதுகள் நடைபெறும் சூழ்நிலைகளிலும் பாதுகாப்பாக இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி போன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தவும் இந்த வலைதளம் மக்களைத் தூண்டி வருகின்றது. சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போலி ஐடிகளைப் பயன்படுத்தி இந்த வலைதளத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

இவர்கள் மூலம் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான தவறான தகவல்களையும் வதந்திகளையும் சமூக ஊடக தளங்களில் பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. பல ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள், போலி செய்திகளின் துண்டுகள் மற்றும் திருத்தப்பட்ட காட்சிகள் ஆகியவை இணையதளத்தில் காணப்பட்டன.

பாதுகாப்பு அமைப்புகளுக்கு இது தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன், வலைதளம் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது. இருப்பினும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட அனைத்து தகவல்களும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் உள்ளன.

இந்த வலைதளம் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து பெரும் நிதியுதவியைப் பெற்று வருவதாக உ.பி. அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் முறைகேடு செய்ததாக மத்திய அரசு சொத்துக்களை முடக்கிய அம்னஸ்டி இன்டர்நேஷனலும் மத்திய அரசை பழிவாங்கும் விதமாக இதில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வலைதளத்தை எழுப்பி தயார்படுத்துவதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) எஸ்.டி.பி.ஐ ஆகியவை ஈடுபட்டுள்ளன என்ற சந்தேகம் உள்ளது.

இதற்கிடையே உளவுத்த்துறை அமைப்புகளிடம் இருந்து கிடைத்த தகவல்கள் மூலம், மத்திய அமலாக்கத்துறை இந்த வலக்கை கையெடுத்துள்ளது.

Views: - 39

0

0