பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட முடிவு..?

21 January 2021, 12:36 pm
Modi_UpdateNews360
Quick Share

கடந்த வாரம் தொடங்கப்பட்ட தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டத்தில் அனைத்து முதலமைச்சர்களுக்கும் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16’ஆம் தேதி முதல் முதற்கட்ட தடுப்பூசி இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்த முதற்கட்டத்தில், கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.

இது முடிந்தவுடன் இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தீவிர உடல்நலக் கோளாறு உள்ள 50 வயதுக்கு குறைவானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது கட்டத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் பிரதமர் உள்ளிட்ட பல உயர்மட்ட அரசியல் தலைவர்களும் 50 வயதுக்கு மேல் உள்ளதால் அவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்படுகிறது.

Views: - 0

0

0