இந்த வெற்றி பல இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும் : லவ்லினாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Author: Babu
4 August 2021, 12:41 pm
modi - lovlina - - updatenews360
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையின் அரைஇறுதியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், துருக்கி நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பூசெனஸ் சர்மினெலி எதிர்கொண்டு விளையாடினார். ஆரம்ப முதலே லவ்லினாவுக்கு துருக்கி வீராங்கனை கடும் சவாலாக திகழ்ந்தார். இதனால், அவரால் புள்ளிகள் ஏதும் பெற முடியவில்லை.

அதே சமயத்தில் துருக்கி வீராங்கனை புள்ளிகளை குவித்தார். இறுதியில் 0-5 என்ற கணக்கில் லவ்லினா தோல்வியை சந்தித்தார். இதன்மூலம், இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால், லவ்லினாவுக்கு வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றினார்.

lovlina - updatenews360

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லாவ்லினாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா போர்ஹோஹை கடுமையாக போராடியுள்ளார். அவரது இந்த வெற்றி பல இந்தியர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். அவருடைய உறுதியும், தன்னம்பிக்கையும் போற்றத்தக்கது. வெண்கலம் வென்ற அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்,” எனக் கூறினார்.

Views: - 201

1

0