கங்கை ஆரத்தி வழிபாட்டில் பிரதமர் மோடி… காசி விஸ்வநாதர் கோவில் வளாத்தில் ரூ.339 கோடியிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்

Author: Babu Lakshmanan
13 December 2021, 7:12 pm
modi 1- updatenews360
Quick Share

உ.பி. : உத்தரபிரதேசத்தில் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் ரூ.339 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

2 நாள் பயணமாக சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவரை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர், கங்கை ஆற்றில் நீராடிய பிறகு, காசி விஸ்வநாதர் கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து, காசி விஸ்வநார் கோவில் வளாகத்தில் ரூ.339 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குறிப்பாக, கங்கை நதியின் கரைகளையும், கோவிலையும் எளிதில் இணைக்கும் பாதையை பக்தர்களுக்கு அர்ப்பணித்தார். சாய்தளங்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாமல், ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாத்ரி சுவிதா மையங்கள், சுற்றுலா வசதி மையம், வேத மையம், பார்வையாளர் மடம், விடுதிகள் உள்பட பல்வேறு வசதிகள் கொண்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கியமானதாக, காசி விஸ்வநாதர் கோவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதோடு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் பிரதமர் மோடி.

இதைத் தொடர்ந்து, இன்று மாலை நடந்து வரும் கங்கை ஆரத்தி வழிபாட்டை சொகுசு கப்பலில் இருந்தவாறு பார்வையிட்டார்.

Views: - 298

0

0