அசாமில் ஒரு லட்சம் பழங்குடியினருக்கு நிலப் பட்டா..! பிரதமர் மோடி விநியோகம்..!

23 January 2021, 12:32 pm
Narendira_Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று அசாமின் சிவசாகரில் உள்ள பழங்குடியினருக்கு நில பட்டாக்கள் ஒதுக்கீடு சான்றிதழ்களை மாநில அரசு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு விநியோகித்தார். 

“அசாமில் உள்ள நம் அரசாங்கம் ஒரு பெரிய பணியை முடித்துள்ளதால், உங்கள் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நான் இன்று இங்கு வந்துள்ளேன். இன்று, அசாமை நேசிப்பவர்கள் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலத்தை அங்கீகரித்து வருகின்றனர்.” என்று மோடி, மாநில பழங்குடி மக்களுக்கு நிலா உரிமைகளை வழங்கும் தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

பிரதமர் அலுவலக வெளியீட்டின்படி, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு, அசாம் அரசாங்கம் பூர்வீக மக்களின் நில உரிமைகளைப் பாதுகாப்பதில் புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்துடன் ஒரு விரிவான புதிய நிலக் கொள்கையை கொண்டு வந்தது.

“அசாம் பழங்குடியினருக்கு பட்டா ஒதுக்கீடு சான்றிதழ்கள் வழங்கப்படுவது அவர்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அசாமில் 2016’ஆம் ஆண்டில் 5.75 லட்சம் நிலமற்ற குடும்பங்கள் இருந்தன.

மே 2016 முதல் தற்போதைய அரசு 2.28 லட்சம் நில பட்டாக்களுக்கான ஒதுக்கீட்டை விநியோகித்துள்ளது. ஜனவரி 23 அன்று நடைபெறும் விழா இந்த செயல்முறையின் அடுத்த கட்டத்தை குறிக்கிறது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், பிரதமர் மோடி அசாம் மற்றும் அதன் மக்களின் மிகப்பெரிய நல்வாழ்வை விரும்புபவர என்று கூறினார். அசாம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து கொல்கத்தாவில் இன்று நடைபெறும் துணிச்சல் தின கொண்டாட்டங்களிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார். ஏப்ரல்-மே மாதங்களில் இரு மாநிலங்களும் சட்டமன்றத் தேர்தலுக்குச் செல்வதால் மோடியின் இரு மாநிலங்களுக்கான வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

Views: - 0

0

0