பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு வெளியீடு..! கடந்த வருடத்தை விட 26% உயர்வு..!

By: Sekar
15 October 2020, 3:10 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து தனது சொத்துக்கள் குறித்த தகவலை தானாக முன்வந்து வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ஜூன் 30, 2020 நிலவரப்படி கிட்டத்தட்ட 2.85 கோடியாக உள்ளது. 

இது 2019’ஆம் ஆண்டில் அவர் அறிவித்த 2.49 கோடி மதிப்புள்ள சொத்துக்களிலிருந்து அதிகரித்துள்ளது. சொத்துக்களின் அதிகரிப்பு பெரும்பாலும் அவரது வங்கி இருப்பு அதிகரிப்பு மற்றும் அவரது வங்கி நிலையான வைப்புத் தொகைக்கு கிடைத்த வட்டியை மறு முதலீடு செய்ததன் மூலம் கிடைத்த தொகையாகும்.

கடனே இல்லாத மோடி :
70 வயதான பிரதமருக்கு பூஜ்ஜிய கடன் உள்ளது. ஜூன் மாத இறுதியில் பிரதமர் மோடியிடம், 31,450 ரூபாய் ரொக்கம் இருந்தது. பிரதமரின் சேமிப்புக் கணக்கு இருப்பு ஜூன் 30 அன்று ₹ 3.38 லட்சமாக இருந்தது. இது மார்ச் 31, 2019 அன்று, 4,143 ரூபாயாக இருந்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் காந்திநகர் கிளையில் அவரது நிலையான வைப்புத் தொகை 2020 ஜூன் 30 நிலவரப்படி 1,60,28,039 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் 1,27,81,574 ரூபாயாக இருந்தது.

தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு :
பிரதமரிடம் நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. அவை சுமார் 45 கிராம் எடையுள்ள 1,51,875 ரூபாய் மதிப்பிலானது. பிரதமர் பங்குகளில் முதலீடு செய்யவில்லை. பிரதமருக்கு காந்திநகரில் 1.1 கோடி மதிப்புள்ள ஒரு வீடு உள்ளது. அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து இதன் ஒரு பகுதி உரிமையாளராக உள்ளார். இந்த அசையா சொத்து பிரதமர் மற்றும் இதர மூன்று நபர்களுக்கும் கூட்டாக உரிமையுடையது.

பிரதமர் மோடிக்கு கார்கள் இல்லை :
பிரதமரின் சொத்து மதிப்பு அதிகரித்து வந்தாலும் அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வரி சேமிப்பு பத்திரங்கள் :
ஆயுள் காப்பீடு, தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி) மற்றும் உள்கட்டமைப்பு பத்திரங்கள் ஆகியவை பிரதமர் மோடியின் விருப்பமான வரி சேமிப்பு முறைகளாக உள்ளன. பிரதமர் தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் மூலம், 8,43,124 ரூபாய் வரிகளைச் சேமிக்கிறார் மற்றும் அவரது ஆயுள் காப்பீட்டிற்காக 1,50,957 ரூபாய் பிரீமியம் செலுத்தினார்.

2019-20 நிதியாண்டில், பிரதமர் தேசிய சேமிப்பு சான்றிதழ்களில், 7,61,646 வைத்திருந்தார் மற்றும் காப்பீட்டு பிரீமியமாக 1,90,347 செலுத்தினார்.

மேலும் ஜனவரி 2012’இல் அவர் ₹ 20,000’க்கு வாங்கிய உள்கட்டமைப்பு பத்திரம் இன்னும் முதிர்ச்சியை எட்டவில்லை.

Views: - 43

0

0