“இமாச்சலப் பிரதேசத்தின் நீண்டகால கனவு நனவானது”..! அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்து மோடி உரை..!

3 October 2020, 11:50 am
PM_Modi_atal_tunnel_rohtang_pass_inaguration_updatenews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று அடல் சுரங்கப்பாதை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவை நனவாக்கியது மட்டுமல்லாமல், இமாச்சல பிரதேச மக்களின் பல தசாப்த கால காத்திருப்பையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்றார். மணாலியை மாநிலத்தின் லஹால்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குடன் இணைக்கும் 9.02 கி.மீ நீளமுள்ள அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பின்னர் பிரதமர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

திறப்பு விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைகளின் தலைவர் பிபின் ராவத், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் எல்லை சாலை அமைப்பின் இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ஹர்பால் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லே-லடாக்கின் உயிர்நாடியாகவும் இந்த சுரங்கப்பாதை மாறும் என்று கூறிய பிரதமர், ஆண்டு முழுவதும் கடும் பனிப்பொழிவின் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு பள்ளத்தாக்கு துண்டிக்கப்படுவதை மாற்றி, தற்போதைய சுரங்கப்பாதை மூலம் ஆண்டு முழுவதும் பள்ளத்தாக்குடன் இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதை நாட்டின் எல்லை உள்கட்டமைப்பையும் பலப்படுத்தும் என மோடி மேலும் வலியுறுத்தினார்.

அப்போது மேக் இன் இந்தியா நகர்வைப் பாராட்டிய மோடி, நாட்டில் நவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக பெரிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

“நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பாதுகாப்பு படைகளின் தலைவர் இப்போது நம் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார். இந்திய இராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப, கொள்முதல் மற்றும் உற்பத்தி இரண்டிலும் சிறந்த ஒருங்கிணைப்பு நிறுவப்பட்டுள்ளது” என மோடி மேலும் கூறினார்.

பீகாரில் வாஜ்பாயால் அமைக்கப்பட்ட கோசி மகாசேது என்ற மற்றொரு பாலத்தின் பணிகள் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 2014 முதல் துரிதப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட அடல் டன்னல், மணாலி மற்றும் லே இடையே சாலை தூரத்தை 46 கி.மீ குறைத்து, பயண நேரத்தை சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை குறைக்கிறது. இமயமலையின் பிர் பஞ்சால் மலைத்தொடரில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் அதி நவீன வசதிகளுடன் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 48

0

0