வாரணாசி – பிரயாகராஜ் நெடுஞ்சாலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

30 November 2020, 4:10 pm
PM_Modi_Varanasi_UpdateNews360
Quick Share

தேவ் தீபாவளியை முன்னிட்டு வாரணாசி சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஆறு வழிச்சாலையான வாரணாசி-பிரயாகராஜ் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைத்தார். 

மொத்தம் 2,447 கோடி ரூபாய் செலவில், 73 கிமீ நீளத்திற்கு புதிதாக அகலப்படுத்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையான இது, புனித யாத்திரை நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை ஒரு மணி நேரம் குறைக்கும்.

காசி விஸ்வநாதர் கோவில் நடைபாதை திட்டம், சாரநாத் தொல்பொருள் தளம் ஆகியவற்றிறையும் மோடி பார்வையிட உள்ளார். பின்னர் வாரணாசியில் தேவ் தீபாவளியில் அவர் கலந்து கொள்வார்.

கார்த்திகை இந்து மாதத்தின் ஒவ்வொரு பூர்ணிமாவிலும் நடைபெறும் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பிரதமர் வாரணாசியில் உள்ள ராஜ் காட்டில் ஒரு மண் விளக்கு ஏற்றி வைப்பார். கங்கையின் இரு கரைகளிலும் பதினொரு லட்சம் மண் விளக்குகள் இந்த தினத்தில் எரியவிடப்படும்.

தற்போது கட்டுமானத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதைத் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பற்றி ஆய்வு செய்ய உள்ள மோடி, இந்த மாத தொடக்கத்தில் அவரால் திறந்து வைக்கப்பட்ட சாரநாத்தின் தொல்பொருள் தளத்திலும் ஒரு ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க உள்ளார்.

Views: - 16

0

0