குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!!

Author: Aarthi
31 December 2020, 8:57 am
modi - updatenews360
Quick Share

புதுடெல்லி: குஜராத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 201 ஏக்கர் நிலத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய இணை சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வின் செளபே ஆகியோர் காணொலி மூலம் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பர் 31ம் தேதி காலை 11 மணிக்கு, காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்திற்காக 201 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது ரூ .1,195 கோடி செலவில் கட்டப்படும், இது 2022 நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Views: - 47

0

0