இ-கோபாலா ஆப்..! கால்நடைகளுக்கான ஆன்லைன் போர்ட்டல்..! விவசாயிகளுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி..!

10 September 2020, 3:15 pm
Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (பி.எம்.எம்.எஸ்.ஒய்) மற்றும் இ-கோபாலா ஆப் ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். நாட்டின் மீன்வளத் துறையின் கவனம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முதன்மைத் திட்டமாக மத்ஸ்ய சம்பதா யோஜனா இருக்கும் என திட்டங்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

இ-கோபாலா ஆப் என்பது விவசாயிகளின் நேரடி பயன்பாட்டிற்கான ஒரு விரிவான ஆன்லைன் சந்தை மற்றும் தகவல் போர்ட்டல் ஆகும்.

கால்நடைகளை நிர்வகிக்கும் விவசாயிகளுக்கு தற்போது அனைத்து வகைகளிலும் நோய் இல்லாத கால்நடைகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது, தரமான இனப்பெருக்க சேவைகள் கிடைப்பது மற்றும் விலங்குகளின் ஊட்டச்சத்துக்காக விவசாயிகளுக்கு வழிகாட்டுதல், பொருத்தமான மருந்துகளைப் பயன்படுத்தி விலங்குகளுக்கு சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் தளமும் தற்போது நாட்டில் இல்லாத நிலையில் அதை நிவர்த்தி செய்ய இ-கோபாலா ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுளளது.

தடுப்பூசி, கர்ப்பம் கண்டறிதல் மற்றும் கன்று ஈன்றல் போன்றவற்றுக்கு உரிய தேதியில் எச்சரிக்கைகள் அனுப்புவதற்கும், பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதற்கும் இ-கோபாலா பயன்பாடு விவசாயிகளுக்கு உதவும்.  

பிரதமர் நரேந்திர மோடி மேலும், “மீன் வளர்ப்பில் ஈடுபடும் மக்கள் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தால் பெருமளவில் பயனடைவார்கள். அடுத்த 3-4 ஆண்டுகளில் மீன் வளர்ப்பில் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, மீன்வளத் துறைக்கு ஊக்கமளிப்பதே அரசின் நோக்கம்.” எனக் கூறியுள்ளார்.

மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் மூலம் ஆத்மநிர்பர் பாரத் தொகுப்பின் ஒரு பகுதியாக 2020-21 முதல் 2024-25 வரையிலான காலங்களில் 20,050 கோடி ரூபாய் செலவிட முடிவு செய்யப்பட்டுளளது. இது மீன்வளத்துறையில் இதுவரை வழங்கப்பட்டுள்ளதிலேயே மிகப்பெரிய தொகையாகும்.

இந்த இரு திட்டங்களும் மீன் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0