ராமாயணா என்சைக்ளோபீடியா..! பூமி பூஜையில் மோடி வெளியிடும் கலைக்களஞ்சியம்..?

2 August 2020, 1:20 pm
pm_modi_updatenews360
Quick Share

அயோத்தியில் நடக்கும் பிரம்மாண்டமான ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வரும் போது, பிரதமர் நரேந்திர மோடி ராமாயண என்சைக்ளோபீடியாவின் அட்டைப் பக்கத்தைத் வெளியிட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. ராமாயண கலைக்களஞ்சியத்தை உத்தரபிரதேச அரசின் கலாச்சாரத் துறை சார்பாக அயோத்தி ஷோத் சான்ஸ்தான் தயாரித்து வருகிறது.

ராமாயண கலைக்களஞ்சியம் அயோத்திக்கு முதன்முதலில் அர்ப்பணிக்கப்பட்டவை உட்பட பல அத்தியாயங்களைக் கொண்டிருக்கும். அயோத்தி தொடர்பான பெயர், வரலாறு, கலாச்சார மற்றும் மத உண்மைகள் போன்ற விவரங்கள் இதில் இருக்கும் என்று அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

இந்த கலைக்களஞ்சியம் அயோத்தி, ராமர் கோவில், கடவுள் ராமர் குறித்து, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு மதிப்புமிக்க, வரலாற்று தகவல்களை அளிக்கும் என்று அயோத்தி மேயர் கூறினார்.

ஆகஸ்ட் 5’ஆம் தேதி நடக்கும் பிரம்மாண்டமான பூமி பூஜை நிகழ்வுக்கு அயோத்தி தினந்தோறும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, பாஜக மூத்தவர் லால் கிருஷ்ணா அத்வானி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா தலைவர் மகாந்த் நிருத்யா கோபால் தாஸ் மற்றும் பொதுச் செயலாளர் முன்னிலையில் தீபாவளி போன்ற கொண்டாட்டங்களுடன் ராமர் கோவில் பூமி பூஜை அற்புதமான விழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 27

0

0