சீன அதிபர், பாகிஸ்தான் பிரதமருடன் வீடியோ கான்பெரன்ஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி..! எதற்காக தெரியுமா..?

9 November 2020, 9:07 pm
Xi_Jinping_Modi_SCO_UpdateNews360
Quick Share

நாளை வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் இணைந்து கலந்துகொள்ள உள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான இராஜதந்திர உறவுகள் காஷ்மீர், பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பயங்கரவாதம், பாலகோட் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள நிலைப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த மூன்று தலைவர்களும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளது பரப்பரப்பைக் கூட்டியுள்ளது.

“எஸ்.சி.ஓ. அமைப்பின் தலைவர்கள் மட்டத்திலான 20’ஆவது கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் பிரதமர் மோடி தலைமையில் நவம்பர் 10 அன்று கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த கூட்டம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையில் நடக்கும்.” என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதத்திற்கும் அதிகமாகக் கொண்டுள்ளது. அண்மைய காலங்களில் நேட்டோவிற்கு எதிர்முனையாக உருவான இந்த பிராந்திய குழுவில் இந்தியா ஒரு தீவிர உறுப்பினராக இருந்து வருகிறது.

இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நீடித்து வரும் நிலையில் முன்னதாக, இந்த விவகாரம் குறித்து மாஸ்கோவில் உள்ள எஸ்சிஓ மேடையில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

இரு தரப்பினரும் எல்லையிலிருந்து விலக ஒப்புக் கொண்டனர். இருப்பினும், சீனா தங்கள் பகுதியிலிருந்து துருப்புக்களை நிறுத்துவதைக் குறைக்க மறுத்துவிட்டதால் முட்டுக்கட்டை தொடர்கிறது.

Views: - 24

0

0

1 thought on “சீன அதிபர், பாகிஸ்தான் பிரதமருடன் வீடியோ கான்பெரன்ஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி..! எதற்காக தெரியுமா..?

Comments are closed.