பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டா பிறந்த நாள்..! நினைவஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி..!

15 November 2020, 10:35 am
Birsa_Munda_Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவுக்கு அவரது பிறந்த நாளான இன்று அஞ்சலி செலுத்தியதுடன், சுதந்திர இயக்கம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான அவரது பங்களிப்பு எப்போதும் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.

ஒரு ட்வீட்டில், முண்டா ஏழைகளைக் காக்க அவதரித்த தலைவர் என்றும், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவினருக்காக எப்போதும் போராடுவதாகவும் மோடி கூறினார்.

இன்றைய ஜார்க்கண்டில் 1875’இல் பிறந்த முண்டா பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்ததோடு, பிரிட்டிஷ் பேரரசிற்கு எதிராக பழங்குடியினரை அணிதிரட்டிய பெருமையும் பெற்றவர். அவர் தனது 25 வயதில் பிரிட்டிஷ் காவலில் உயிரிழந்தார்.

2000’ஆம் ஆண்டில் முண்டாவின் பிறந்த ஆண்டு விழாவில் ஜார்க்கண்ட் மாநிலம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. மோடி ஜார்க்கண்ட் உதயமான இன்று, மாநில மக்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வாழ்த்தினார்.

Views: - 33

0

0