பெண்கள் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தவர் ஜெயலலிதா..! பிறந்த நாளில் நினைவு கூர்ந்த மோடி..!

24 February 2021, 1:18 pm
Modi_Jayalalitha_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி, இன்று 73’வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்தார். மேலும் நமது பெண்களின் சக்தியை மேம்படுத்துவதற்கு ஜெயலலிதா குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டதாக கூறினார்.

“ஜெயலலிதா ஜியை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றால் பரவலாகப் போற்றப்படுகிறார். 

மேலும் நம் பெண்கள் சக்தியை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். அவருடனான எனது பல சந்திப்புகளை நான் எப்போதும் போற்றுவேன்.” என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

1948’இல் பிறந்த ஜெயலலிதா, 1991 மற்றும் 2016’க்கு இடையில் பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து முறை தமிழக முதல்வராக பணியாற்றினார். 

1982’ஆம் ஆண்டில், எம் ஜி ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தபோது, ஜெயலலிதா அவர் நிறுவிய கட்சியான அதிமுகவில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி, அதிகமுவின் ஒற்றைத் தலைவராக கடைசி வரை வலம் வந்தார்.

Views: - 9

0

0