தடுப்பூசி விநியோகத்திற்கு தேவையான உள்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துக..! முதல்வர்களுக்கு மோடி அறிவுறுத்தல்..!

24 November 2020, 4:50 pm
Narendra_Modi_UpdateNews360
Quick Share

கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கேட்டுக் கொண்டார். 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தடுப்பூசியை சீராக விநியோகிக்க சரியான நடைமுறை இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். 

எந்தவொரு தலைவரையும் பெயரிடாமல், பிரதமர் மோடி, ஒரு சிலர் தடுப்பூசி தொடர்பாக அரசியல் செய்து கொண்டிருந்தாலும், ​”அதன் விநியோகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதே முதன்மையானது என்று கூறினார்.

மறுஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் முதலமைச்சர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி வழங்கும் உத்தி குறித்து தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு பார்வையையும் யாராலும் திணிக்க முடியாது என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். “கூட்டு முயற்சிகளின் விளைவாக, மீட்பு மற்றும் இறப்பு விகிதங்களில் இந்தியா மற்ற நாடுகளை விட சிறந்த சூழ்நிலையில் உள்ளது” என்று அவர் கூறினார்.

கொரோனா விகிதத்தை 5 சதவீதத்திற்கும், இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டுவருவதே இலக்கு என்று அவர் கூறினார். மேலும் அதிக ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.

“ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர்களைக் கிடைக்கச் செய்வதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளையும் மாவட்ட மருத்துவமனைகளையும் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தன்னிறைவு அடைய முயற்சிக்கிறோம். நாட்டில் 160’க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று அவர் முதல்வர்களிடம் கூறினார் .

“கொரோனாவை கையாள்வதில் சில நபர்களிடையே கவனக்குறைவு ஏற்பட்டது. இப்போது விழிப்புணர்வை மீண்டும் பரப்புவதற்கும் நாம் பணியாற்ற வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.

தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர், பரிசோதனையின் கடைசி கட்டத்தில் நுழைந்ததாக கூறினார்.

“வேகத்தைப் போலவே பாதுகாப்பும் முக்கியமானது. இந்தியா தனது குடிமக்களுக்கு அனைத்து அறிவியல் தரங்களிலும் பாதுகாப்பாக இருக்கும் தடுப்பூசியையே வழங்கும். தடுப்பூசி விநியோக உத்தி மாநிலங்களுடன் கூட்டு ஒருங்கிணைப்பில் நடைமுறைப்படுத்தபப்டும். மாநிலங்களும் குளிர் சேமிப்பு கிடங்குகளை கட்டமைக்கத் தொடங்க வேண்டும்.” என்று பிரதமர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்குத் தயாராவதற்காக மாவட்ட அல்லது தொகுதி மட்டத்தில் பணிக்குழு / வழிநடத்தல் குழுக்களை அமைக்கவும் பிரதமர் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 21

0

0

1 thought on “தடுப்பூசி விநியோகத்திற்கு தேவையான உள்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துக..! முதல்வர்களுக்கு மோடி அறிவுறுத்தல்..!

Comments are closed.