பெண்கள், விவசாயிகளை அமைச்சராக்கியது பல பேருக்கு ஜீரணிக்க முடியவில்லை : பிரதமர் மோடி விமர்சனம்..!!

19 July 2021, 1:08 pm
modi 1 - updatenews360
Quick Share

டெல்லி : பெண்கள், விவசாயிகள் மற்றும் பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாவதை பல பேருக்கு ஜீரணிக்க முடியவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சலசலப்புக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் தனது அமைச்சர்கள் சபையை அறிமுகப்படுத்தினார்.

அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது :- பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அமைச்சர்களாகிவிட்டதால் நாடாளுமன்றத்தி புதிய உற்சாகம் பிறக்கும் என நினைக்கிறேன். அதேபோல, விவசாயம் மற்றும் கிராமப்புற பின்னணியை கொண்டவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள், விவசாயிகள் மற்றும் பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாவதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை, எனக் கூறினார்.

பிரதமர் உரையாற்றும் போது எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும், எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Views: - 121

0

0

Leave a Reply