முந்தைய ஆட்சியில் நாட்டை கொள்ளையடித்தவர்களின் நிலை என்ன தெரியுமா..? பிரதமர் மோடி பேச்சு

Author: Babu
14 September 2021, 5:24 pm
modi - updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : முந்தைய ஆட்சியின் போது நாட்டை கொள்ளையடித்தவர்களில் பெரும்பாலானோர் சிறையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிறந்த கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ராஜா மகேந்திர பிரதாப் சிங் நினைவாக உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டினார். இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில் வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிக்காக மாநில அரசுடன் மத்திய அரசும் இணைந்து பணியாற்றி வருகிறது. சிறந்த தொழில் கட்டமைப்புகள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு காலத்தில் ஆட்சி நிர்வாகம் குண்டர்கள் மற்றும் ஊழல் செய்தவர்களின் கைகளில் ஆட்சி இருந்தது. தற்போது, அவர்களில் பெரும்பாலானோர் சிறையில் உள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டி உள்ளது.

பாதுகாப்பு துறையில் இறக்குமதியை சார்ந்திருந்த இந்தியா, தற்போது பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நமது நாடு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலகமும் இதை பார்க்கிறது, என தெரிவித்தார்.

Views: - 188

0

0

Leave a Reply