எதிர்வரும் காலங்களில் சுற்றுச்சூழல், வளங்களை பாதுகாப்பது அவசியம் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
13 August 2021, 5:43 pm
Quick Share

பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் முதலீட்டாளர் மாநாட்டை காணொளி காட்சியின் மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார். அப்போது, பழைய வாகனங்களைக் கழித்துக் கட்டும் தேசியக் கொள்கையையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : சுதந்திரத்தின் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் நம் வாழ்க்கை முறை, தொழில் வணிகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அந்த சமயத்தில் சுற்றுச்சூழல், நிலம், வளங்கள் ஆகியவற்றைக் காப்பதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தொழில்நுட்பம், புதுமையை புகுத்துவதை எதிர்காலத்திலும் நிகழ்த்த முடியும். ஆனால், இயற்கை வளங்களை பூமித்தாயிடம் இருந்தே பெற முடியும். நீடித்த வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும். மக்களின் நலனுக்காக, பெரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Views: - 320

0

0