இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் மோடி..! அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தல்..!

8 April 2021, 1:04 pm
Modi_Vaccination_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியின் எய்ம்ஸில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு, வைரஸைத் தோற்கடிக்க விரைவில் அதை செலுத்திக்கொள்ளுமாறு, தடுப்பூசி போட தகுதியுள்ளவர்களைக் கேட்டுக்கொண்டார். அவர் மார்ச் 1 ஆம் தேதி மருத்துவமனையில் தனது முதல் டோஸை செலுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

“இன்று எய்ம்ஸில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். வைரஸைத் தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்றாக உள்ளது. நீங்கள் தடுப்பூசிக்கு தகுதியுடையவராக இருந்தால், விரைவில் உங்கள் டோஸை பெறுங்கள். CoWin.gov.in’இல் பதிவுசெய்க.” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மேலும் தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படத்தையும் வெளியிட்டார்.

பாரத் பயோடெக் உருவாக்கிய இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சினை மோடி செலுத்திக்கொண்டுள்ளார்.

இன்று பிரதமருக்கு தடுப்பூசி வழங்கிய இரண்டு செவிலியர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பி நிவேதா மற்றும் பஞ்சாபிலிருந்து நிஷா சர்மா என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக மார்ச் 1’ம் தேதி முதல் ஷாட்டை அவருக்கு வழங்குவதில் நிவேதாவும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0

Leave a Reply