நவ.5 ஆம் தேதி கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

Author: Udhayakumar Raman
26 October 2021, 11:07 pm
Quick Share

உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத்க்கு வருகிற நவ.5 ஆம் தேதி பிரதமர் மோடி சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான கேதார்நாத் ஆலயத்திற்கு நவ.5 ஆம் தேதி பிரதமர் மோடி சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார். முன்னதாக அங்கு 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி சென்றிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிகாலத்தில் கேதர்நாத் கோவிலுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். மேலும் கேதார்நாத் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களை, பிரதமர் துவக்கி வைக்கிறார்.மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைப்பத்துடன், கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையையும் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் உத்தரகண்டில் 2022 , பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 227

0

0