நீடித்த இருளை நீக்கிய மோடி..! ஆர்டிகிள் 370 நீக்கத்தின் ஓராண்டு நிறைவு..! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட்..!

5 August 2020, 4:08 pm
Kashmir_UpdateNews360
Quick Share

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆர்டிகிள் 370’வது பிரிவை ரத்து செய்ததன் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

“சாமானியர்களுக்கு நீதி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றைப் பெறுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பிராந்தியங்களுக்கு வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை கொண்டு வர பல தசாப்தங்களாக நீடித்த இருளை ஆர்டிகிள் 370’வது பிரிவை ரத்துசெய்ததன் மூலம் நீக்கியுள்ளார்.” என அவர் தன்னுடைய டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

ஆர்டிகிள் 370, ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை அதன் சிறப்பு அந்தஸ்திலிருந்து அகற்றி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

ஒரு வருடம் கழித்து, பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது மட்டுமல்லாமல், மக்கள் மற்றும் இராணுவம், காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) அதிகாரிகளின் கூடுதல் ஆதரவோடு நிலைமை படிப்படியாக மேம்பட்டுள்ளது.

அரசாங்க தரவுகளின்படி, காஷ்மீரில் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை ஜனவரி முதல் ஜூலை வரை 120’ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் 198 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கல் எறியும் சம்பவங்கள் இந்த கால கட்டத்தில் 102’ஆக கணிசமாகக் குறைந்துவிட்டன. இதுபோன்ற சம்பவங்கள் 2019’இல் 389 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பாதுகாப்புப் படையினரிடையே வலுவான இருப்பு மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பு காரணமாக பயங்கரவாதிகளால் கையெறித் தாக்குதல்களை நடத்த முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு இதுவரை 21 கையெறி குண்டு தாக்குதல்கள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பந்த்துக்கான அழைப்பு விடுப்பதிலும் பிரிவினைவாதிகள் அல்லது பயங்கரவாத குழுக்களின் செல்வாக்கும் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு நான்கு வேலைநிறுத்த அழைப்புகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த 2019’ல் 30 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக எந்திரத்தை வலுப்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் நேற்று ரூ 25 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இது தொகுதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர்களின் வசம் இருக்கும்.

ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்து ராஜ் முறையை வலுப்படுத்தி அதிகாரம் அளிக்கும் நோக்கில் லெப்டினன்ட் கவர்னர் கிரிஷ் சந்தர் முர்மு இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தொடர்பான சம்பவம் காரணமாக மரணம் ஏற்பட்டால், யூனியன் பிரதேசத்தின் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் (பிஆர்ஐ) மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (யுஎல்பி) தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ரூ 25 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Views: - 10

0

0