முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா..! விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து..!

20 April 2021, 5:28 pm
Modi_Rahul_UpdateNews360
Quick Share

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் விரைவாக குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மக்களவையின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஜியின் நல்ல ஆரோக்கியம் மற்றும் விரைவான மீட்சிக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உடல்நலம் குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். மேலும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

“லேசான அறிகுறிகள் தென்பட்ட பிறகு, எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருமே, தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் அவருக்கு விரைவாக குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார். “ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார் என்பதை அறிந்து கொண்டேன். அவரின் உடல்நலன் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.” என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Views: - 92

0

0