பிஎம்சி வங்கி முறைகேடு..! சிவசேனா தலைவரின் மனைவிக்கு சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை..!

27 December 2020, 8:43 pm
Sanjay_Raut_Varsha_Raut_UpdateNews360
Quick Share

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி மோசடியில் ஒரு புதிய திருப்பமாக, அமலாக்க இயக்குநரகம் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தை டிசம்பர் 29 அன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக டிசம்பர் 11’ஆம் தேதி அவர் முதன் முதலில் அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் சுகாதார பிரச்சினைகளை மேற்கோள் காட்டி அவர் ஆஜராவதிலிருந்து தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

வர்ஷா ராவத்தின் அறிக்கை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் என்றும், அவர் இந்த முறை விசாரணையில் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சில நிதி ரசீதுகள் தொடர்பாக வர்ஷா ராவத்தை கேள்வி கேட்க அமலாக்கத்துறை விரும்புகிறது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றின் மூலம் மத்திய அரசு மிரட்ட முயற்சிப்பதாக மகா விகாஸ் அகாதி கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

Views: - 1

0

0