“நானே கொன்றிருப்பேன்”..! பிரான்ஸ் ஆசிரியர் கொலை குறித்து பிரபல உருதுக் கவிஞர் ராணா சர்ச்சைக் கருத்து..!

2 November 2020, 5:18 pm
urdu_poet_munawwar_rana_updatenews360
Quick Share

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம் தொடர்பாக பிரான்சில் அண்மையில் நடந்த கொலைகளை ஆதரித்ததற்காக உருது கவிஞர் முனாவர் ராணா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் ராணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என ஒரு அதிகாரி கூறினார்.

கருத்து சுதந்திரம் குறித்த ஒரு பள்ளி வகுப்பில் பிரெஞ்சு ஆசிரியர் முகமது நபியின் கேலிச் சித்திரத்தை வெளியிட்டதால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரை தலை துண்டித்து கொலை செய்தனர். இந்த பிரான்சில் நாடு முழுவதும் மக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது.

பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது பிரான்ஸ் அரசு கடும் நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில், கத்திக்குத்து சம்பவங்கள் நடந்து நிலைமை மிக மோசமாகியுள்ளது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒரு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “எந்தவொரு நபரும் என் தந்தை அல்லது தாயின் மோசமான கார்ட்டூனை உருவாக்கினால், நான் அவரைக் கொன்றுவிடுவேன்” என்று ராணா சொல்வது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முழு சம்பவத்திற்கும் அவர் ஆதரவளிக்கிறாரா என்று குறிப்பாக கேட்டபோது, ​​அவர் “நான் அவரைக் கொல்வேன்.” என்று கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இந்நிலையில் நேர்காணலை அறிந்த போலீசார் கவிஞர் ராணா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 15

0

0

1 thought on ““நானே கொன்றிருப்பேன்”..! பிரான்ஸ் ஆசிரியர் கொலை குறித்து பிரபல உருதுக் கவிஞர் ராணா சர்ச்சைக் கருத்து..!

Comments are closed.