விஜயவாடா அருகே துப்பாக்கி சூடு : காவல் ஆணையரின் உதவியாளர் பலி!!

By: Udayachandran
11 October 2020, 12:41 pm
Gun Shot Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் விஜயவாடா காவல் ஆணையரின் உதவியாளர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடா புறநகர் பகுதியில் உள்ள சுப்பாரெட்டி பார் அண்ட் ரெஸ்டாரெண்ட் அருகே நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் விஜயவாடா காவல் ஆணையர் அலுவலகத்தில் அட்டெண்டராக வேலை செய்யும் மகேஷ் என்பவர் மரணமடைந்தார்.

ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர் சுப்பாரெட்டி பார் அண்ட் ரெஸ்டாரன்ட் அருகே நின்றுகொண்டிருந்த மகேஷ் மீது துப்பாக்கி சூடு நடத்தியபோது மகேஷ் உடன் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

ரியல் எஸ்டேட் வியாபாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே மகேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்றபோது மகேஷ் உடன் இருந்து தப்பி ஓடியவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட மகேஷ் உடலை கைப்பற்றிய விஜயவாடா போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த துப்பாக்கி குண்டு ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Views: - 48

0

0