“பாதுகாப்புப் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்துறாங்க”..! அலறிய மாவோயிஸ்ட்கள்..! மறுத்த சத்தீஸ்கர் போலீஸ்..! பரபர பின்னணி..!

21 April 2021, 7:46 pm
armed_Naxals_Bijapur_updatenews360
Quick Share

சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடம் கிராமத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக மாவோயிஸ்ட் கூறியதை சத்தீஸ்கர் போலீசார் இன்று நிராகரித்தனர். மாவோயிஸ்டுகளின் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், மாவோயிஸ்டுகளிடையே உள்ள குழப்பத்தின் விளைவுதான் இது என்றும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படையினர் தங்கள் முகாம்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக மாவோயிஸ்டுகளின் பீஜப்பூர் டி.கே.எஸ்.ஜெ.சி குற்றம் சாட்டியுள்ளது. ட்ரோன்கள் மூலம் 12 குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவை குடெம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர்.

எனினும் காவல்துறை, தங்கள் அறிக்கையில், “பஸ்தாரில் பாதுகாப்புப் படைகள் சட்ட கட்டமைப்பிற்குள் செயல்படுகின்றன. பிராந்தியத்தின் பூர்வீக மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் இதை உறுதியாக கடைப்பிடித்து வருகின்றன.” எனத் தெரிவித்துள்ளது.

“மாவோயிஸ்டுகள் தான் ஐ.இ.டி மற்றும் வெடிக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பறித்திருக்கிறார்கள். ஐ.இ.டி.’க்களைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினருக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியில் அவர்கள் குழந்தைகள், பெண்கள் மற்றும் விலங்குகளையும் கூட விட்டுவைக்கவில்லை.” என போலீசார் தங்கள் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
இன்று முன்னதாக மாவோயிஸ்ட்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பில் நாராயண்பூரில் ஒரு ஐ.டி.பி.பி அதிகாரி பலத்த காயமடைந்துள்ளதோடு, அங்குள்ள விவசாயி ஒருவரின் மாடு கொல்லப்பட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

“பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க பாதுகாப்புப் படையினரைக் குறை கூற எந்த தார்மீக அதிகாரமும் நக்சல்களுக்கு இல்லை. அவர்கள் பஸ்தாரின் அப்பாவி பழங்குடியினருக்கு எதிராக கொடுமையை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்தி, பூர்வீக மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டிய நேரம் இது.” என போலீஸ் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் 13’ஆம் தேதி, ஜார்க்கண்டின் முதல் முதலமைச்சர் பாபுலால் மராண்டியின் மகன் உட்பட 20 பேர் கொல்லப்பட்ட 2007’ஆம் ஆண்டு சில்காரி படுகொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹார்ட்கோர் மாவோயிஸ்ட் கோல்ஹா யாதவ் பீகாரில் கைது செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பீகாரில் உள்ள ஜமுயியில் இருந்து கிரிடிஹ் மாவட்டத்தின் பெல்வாகதி காவல் நிலைய அதிகாரிகளால் அவர் பிடிக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அமித் ரேணு தெரிவித்தார்.

Views: - 104

0

0