ஏய் சாலா, என் கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா : போலீசார் முன் இளம் தம்பதி செய்த செயல்!!

19 April 2021, 1:43 pm
Delhi Couples -Updatenews360
Quick Share

டெல்லி : காரில் மாஸ்க் அணியாமல் வந்த இளம் தம்பதியை தடுத்து நிறுத்திய போலீசாரை பெண் அடவாடித்தனமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் டெல்லியில் தொற்று வேகமாக பரவி வருவதால் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தரியகஞ்ச் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரில் வந்த இளம் தம்பதியை தடுத்து நிறுத்திய போலீசார், முகக்கவசம் எங்கே என கேட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காருக்குள் இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதைக் கேட்காத பெண், என் கணவனை முத்தமிடுவதை தடுக்க முடியுமா என கேட்டார். இதனால் போலீசார் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு முறையாக வழக்கு பதிவு செய்து கணவன் பங்கஜ்தத்தா மற்றும் மனைவியை கைது செய்தனர்.

Views: - 98

0

0