டெல்லி காவல்துறைதான் முடிவெடுக்கணும்..! விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!

18 January 2021, 12:37 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

குடியரசு தினத்தன்று விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணிக்கு எதிராக தடை உத்தரவு கோரி மத்திய அரசு தாக்கல் செய்த விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச், இது சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயம் என்றும் இது போலீசாரால் தீர்மானிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் காவல்துறையினருக்கே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் காவல்துறை முடிவெடுக்கும் வரை எந்த உத்தரவையும் நிறைவேற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

“நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. இந்த விஷயத்தை ஜனவரி 20’ஆம் தேதி நாங்கள் மீண்டும் எடுத்துக்கொள்வோம்” என்று நீதிமன்றம் கூறியது.

டெல்லி காவல்துறை மூலம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், குடியரசு தினத்தன்று ஒரு சிறிய குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதோடு, டிராக்டர் அணிவகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகளின் அறிவுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கவும் தொந்தரவு செய்யவும் முயற்சிக்கும் எந்தவொரு அணிவகுப்பு அல்லது எதிர்ப்பு தேசத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்று அது கூறியது. எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையில் ஒருபோதும் உலகளவில் நாட்டை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அது கூறியது.

எந்தவொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் நடத்துவதைத் தடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது.

தற்போது காவல்துறையை முடிவெடுக்கும்படி உச்சகநீதிமன்றம் கூறி, வழக்கின் விசாரணையையோ ஒத்திவைத்துள்ளதால், டெல்லி காவல்துறை  முடிவெடுக்கும் எனும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

Views: - 0

0

0