சைலன்சர்களை சள்ளி சள்ளியாக நொறுக்கிய போலீஸ் : பைக்கில் அலப்பறை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு ‘செக்‘!!

Author: Udayachandran
5 August 2021, 4:54 pm
Silencers Removed- Updatenews360
Quick Share

ஆந்திரா : ஒலி மாசு ஏற்படுத்திய ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த சைலன்ஸ்ர்கள் ரோடுரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர்.

அதிக சப்தம் வெளிப்படும் வகையிலான சைலன்ஸர்களை இளைஞர்கள் தங்களுடைய ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் சைக்கிளில் பொருத்தி வீதி வலம் வருவது வழக்கமாகி உள்ளது. இதனால் ஒலி மாசு அதிக அளவில் ஏற்படுகிறது.

எனவே திருப்பதி எஸ்பி வெங்கட்ட அப்பல நாயுடு உத்தரவின்பேரில் போலீசார் அதிக சப்தத்தை வெளிப்படுத்தும் வகையிலான சைலன்ஸர் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சைலன்சர்களை தனியாக கழற்றி எடுத்தனர்.

இந்நிலையில் தனியாக கழற்றப்பட்ட அதிக அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் திருப்பதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையம் எதிரில் ரோடு ரோலர் ஏற்றி அளிக்கப்பட்டன.

இந்த விஷயத்தில் பெற்றோர்கள் குறிப்பிட்ட அளவு கவனம் செலுத்தி இதுபோன்ற சைலன்ஸர்களை தங்களுடைய குழந்தைகள் பயன்படுத்தாத வகையில் அக்கறை காட்ட வேண்டும் என்று திருப்பதி எஸ்பி வெங்கட அப்பல நாயுடு கூறினார்.

Views: - 210

0

0