வழக்கு பதியாமல் இருக்கணும்னா என் வீட்டுக்கு வா! குற்றவாளியின் மகளை “படுக்கைக்கு“ அழைத்த காவலர்!
25 August 2020, 12:20 pmஆந்திரா : சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவரது மகளை படுக்கைக்கு அழைத்த காவலரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பொண்டூரு காவல்நிலைய எஸ்.ஐ ராமகிருஷ்ணா. பொண்டூரு அருகே உள்ள துங்கபேட்டா கிராமத்தில் இருக்கும் அப்பாராவ் என்பவரது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பற்றி தகவல் அறிந்த எஸ்.ஐ ராமகிருஷ்ணா, போலீஸ் படையுடன் சென்று மதுபாட்டில்களை கைப்பற்றினார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த இளம்பெண்ணை நோட்டமிட்ட எஸ்.ஐ. ராமகிருஷ்ணா மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக யாரையும் கைது செய்யாமல் தவிர்த்தார். மேலும் அந்த இளம் பெண் அவருடைய தந்தை ஆகியோரிடம் காவல் நிலையத்திற்கு வந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
எனவே அந்த இளம் பெண்,அவருடைய தந்தை அப்பாராவ் ஆகியோர் காவல் நிலையம் சென்ற போது இளம்பெண்ணின் செல்போன் நம்பரை மட்டும் கேட்டு பதிவு செய்துகொண்ட எஸ்.ஐ.ராமகிருஷ்ணா அவரை அனுப்பி விட்டார். பின்னர் அந்த இளம் பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட எஸ்.ஐ. ராமகிருஷ்ணா வழக்குப்பதிவு செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்றால் நீ என் வீட்டுக்கு தனியாக வர வேண்டும் என்று கேட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் போலீஸ் எஸ்.ஐ. ராமகிருஷ்ணாவின் கோரிக்கையை நிறைவேற்றுவது போல் அவருடன் பேசி செல்போனில் உரையாடல்களை பதிவு செய்தார்.
பின்னர் இது தொடர்பாக அவர் போலீஸ் அதிகாரிகளிடம் அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ ராமகிருஷ்ணா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெறுகிறது.