பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அருகில் கஞ்சா விற்பனை அமோகம்..!

6 December 2019, 4:19 pm
Arrested Kanja case- updatenews360 (8)
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அருகில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் 10,000 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில், பள்ளிக்கூடங்கள் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பித்துச் செல்ல முயன்றார்.

அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் இருந்து, 21 பாக்கெட் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு பாக்கெட்டும் 10 கிராம் எடை கொண்டது என தெரியவந்தது. தொடர்ந்து, நடத்திய விசாரணையில் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோதி என்பதும் முதலியார்பேட்டை பகுதியில், வீடு எடுத்து தங்கி இருந்ததாக தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலையை சேர்ந்த உமாமகேஸ்வரனிடம் இருந்து, கஞ்சாவை வாங்கி வந்து புதுச்சேரியில், விற்பனை செய்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் திருவண்ணாமலை சென்று, உமாமகேஸ்வரனை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் எட்டாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல், செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோதி மற்றும் உமாமகேஸ்வரன் அகிய இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி அருகில், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டம் போன்று கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தெரிவித்தார்.