தீ விபத்தில் சிக்கி பிரபல வங்காள ஜோதிடர் பலி..!

1 November 2020, 2:26 pm
jayant_shastri_updatenews360
Quick Share

பிரபல வங்காள ஜோதிடர் ஜெயந்த சாஸ்திரி இன்று காலை தனது கிழக்கு கொல்கத்தா இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தார். சாஸ்திரியின் கெஸ்டோபூர் பரோவரிடலா இல்லத்தின் இரண்டாவது மாடியில் தீப்பிடித்ததை அக்கம்பக்கத்தினரும் உள்ளூர்வாசிகளும் கண்டனர். 

இதையடுத்து அவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

உள்ளூர்வாசிகள் முதலில் காலை 8 மணியளவில் தீப்பிழம்பைக் கண்டனர். இப்பகுதியில் மக்கள் அடர்த்தியாக இருப்பதால் தீயணைப்பு நடவடிக்கைக்கு இடையூறு ஏற்பட்டது.

பின்னர், சாஸ்திரியின் எரிந்த உடல் அவரது வீட்டின் உள்ளே இருந்து மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஈ.எம் பைபாஸில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. ஜோதிடரின் உடலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் தீக்காயம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்று தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 21

0

0

1 thought on “தீ விபத்தில் சிக்கி பிரபல வங்காள ஜோதிடர் பலி..!

Comments are closed.