கடன் வசூலிக்கும் சாக்கில் விவசாயி மனைவியிடம் ஆபாச பேச்சு : வங்கி ஊழியரை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவசாய தம்பதி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2021, 4:11 pm
Naked Attack -Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் அருகே நிதி நிறுவனம் மூலம் டிராக்டர் கடன் வாங்கிய விவசாயி மனைவிக்கு கள்ளக்காதல் வலை வீசிய நிதி நிறுவன ஊழியரை விவசாய தம்பதி நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலத்தை சேர்ந்த சிவராமபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர் என்பவர் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் கடன் பெற்று டிராக்டர் வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் அந்த நிதி நிறுவன ஊழியரான ஆனந்த் ரெட்டி கடன் தொகையை வசூல் செய்வதற்காக ராஜசேகர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார். ராஜசேகர் சரியாக கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் இருந்த போது அவருடைய மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆனந்த் ரெட்டி அவரிடம் ஆபாசமாக பேசியதாக தெரிய வந்துள்ளது.

எனவே ஆனந்த் ரெட்டியுடன் மெதுவாக பேசி வீட்டுக்கு வரவழைத்த ராஜசேகர் அவரை வீட்டில் நிர்வாணப்படுத்தி தாக்கினார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆனந்த் ரெட்டி பணம் வசூல் செய்ய சென்றபோது பணம் கட்ட மறுத்து ராஜசேகர் தன்னை தாக்கியதாக கூறினார்.

இந்த நிலையில் ஆனந்த் ரெட்டி ராஜசேகர் மனைவியிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக ஆடியோ வெளியானதால் தற்போது ஆனந்த் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 369

1

0