ராமரை வழிபட்டது ஒரு குற்றமா..? இஸ்லாமிய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

19 August 2020, 5:54 pm
Ram_Mandir_UpdateNews360
Quick Share

அயோத்தியில் ராமர் கோவிலின் பூமி பூஜை விழாவின் போது ராம் லல்லாவின் ஆர்த்தி நிகழ்ச்சியை நடத்தியதற்காகவும், இந்து கடவுளுக்கு ராக்கி அனுப்பியதற்காகவும் அலிகரைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் ஒரு பெண் முஸ்லீம் தலைவர் இஸ்லாத்திலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும் அவரது குடும்பத்தினருடன் கொல்லப்படுவார் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜக தொண்டர்களுடன் ரூபி ஆசிப் கான் என்ற பெண்மணி அலிகரில் உள்ள டெல்லி கேட் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

முஸ்லீம் பெண்ணுக்கு எதிராக அலிகார் முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ரூபி காவல்துறைக்குச் சென்று தன்னை அச்சுறுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார்.

அலிகரின் ஏடிஏ காலனி பகுதியில் ஷா ஜமாலில் வசிக்கும் ரூபி மகாவீர் கஞ்ச் பாஜக மஹிலா மோர்ச்சாவின் தலைவராக உள்ளார்.

ரூபி ஜூலை 30’ஆம் தேதி ராம் லல்லாவுக்கு ஒரு ராக்கி’ அனுப்பியிருந்தார். ஆகஸ்ட் 5’ஆம் தேதி அயோத்தியில் பூமி பூஜை நடைபெற்றபோது, அவரும் வேறு சில பெண்களும் சேர்ந்து அலிகரில் உள்ள தனது வீட்டில் ஒரு பூஜை நடத்தினர். மேலும் ராமர் கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு காசோலை மூலம் ரூ 5,100 தொகையை நன்கொடையாக அளித்திருந்தார்.

இந்த காரணங்களால் தான் தன்னை உயிருடன் எரிப்பதாக சிலர் மிரட்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். ரூபி மற்றும் மற்றொரு நர்கிஸுடனான சுவரொட்டிகள் முழு டெல்லி கேட் பகுதியிலும் வைக்கப்பட்டன. அதில் அவர்கள் ராமர் கோவிலுக்கு பூஜை செய்வதாகக் காட்டப்பட்டது மற்றும் ஷரியா சட்டத்தின் கீழ் அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அஞ்சுவதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே பல இந்து பாஜக தொண்டர்கள் ரூபிக்கு ஆதரவாக நின்று புகார் பதிவு செய்ய உதவியதாக அவரது கணவர் முகமது ஆசிப் தெரிவித்தார்.

Views: - 40

0

0