பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : ராணுவ மருத்துவமனை தகவல்…!

12 August 2020, 4:55 pm
Quick Share

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 2012 முதல் 2017 வரை குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக அவர் மூளையில் ஏற்பட்ட கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அதற்காக எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழலில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து 3வது நாளாக கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை டெல்லி ராணுவ ஆராய்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 12

0

0