பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்..!ராணுவ மருத்துவமனை அறிக்கை..!

20 August 2020, 1:41 pm
pranab_mukherjee_updatenews360
Quick Share

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இன்று லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அவர் வென்டிலேட்டர் ஆதரவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று ராணுவ மருத்துவமனை இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள சுகாதார புல்லட்டினில், முகர்ஜியின் உடல்நிலை நிலையாக உள்ளது மற்றும் நிபுணர்களின் குழுவால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருந்தபோதிலும், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. மேலும் அவை நிபுணர்களின் குழுவினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன” என்று சுகாதார புல்லட்டினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 வயதான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆகஸ்ட் 10’ஆம் தேதி டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரணாப் முகர்ஜிக்கு அவரது மூளையில் உள்ள ஒரு கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்றிலிருந்து அவர் கோமா நிலையில் உள்ளார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார். மேலும் காங்கிரஸ் அமைச்சரவையில் பல முக்கிய பதவிகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 29

0

0