வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 3 நாட்களுக்கு கனமழை அலர்ட்..!!

22 July 2021, 11:27 am
Quick Share

டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 மிதமான மழை

வடமேற்கு வங்கக்கடலில் நாளை திய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதியால் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகத்துக்கு மழை உண்டா? | Patrikai  - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu,  India & World - politics, cinema, cricket, video ...

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதால் தென்மேற்கு பருவகாற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே சாயங்கால நேரங்களில் நல்ல மழை பெய்கிறது. சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடமேற்கு வங்க கடல் பகுதியில் 23ம் தேதி அதாவது நாளைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Depression in the Bay of Bengal - Indian Meteorological Department  Information || வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய  வானிலை மையம் தகவல்

அதனால், 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், வட மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதாவது நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று உருவாகி உள்ளது. இதனால், தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Views: - 119

0

0