மண்சரிவில் சிக்கி கர்ப்பிணி மற்றும் சிறுவன் பலி : ஆந்திராவில் அரங்கேறிய சோகம்!!

Author: Udayachandran
12 October 2020, 4:03 pm
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண் மற்றும் 3 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காஜுவாக்க பகுதியில் இருக்கும் கணபதி நகர் மலைப்பகுதி சமீபத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதி ஆகும்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கணபதி நகர் சமீபத்தில் இருக்கும் மலைப் பகுதியில் இன்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டது. அப்போது மலைப்பகுதியில் ஒட்டியிருக்கும் தங்களுடைய வீட்டில் கர்ப்பிணி ராமலட்சுமி, அவருடைய மூன்று வயது மகன் நானேஸ்வர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது மலைப்பகுதியில் இருந்து சரிந்து விழுந்த மண், பாறைகள் ஆகியவை ராமலட்சுமி வீட்டின் மீது விழுந்து வீடு இடிந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த கர்ப்பிணி ராமலட்சுமி, சிறுவன் நானேஸ்வர் ஆகியோர் மண்சரிவில் சிக்கி மரணமடைந்தனர். மற்ற குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Views: - 29

0

0