விவிஐபிக்களுக்கான அதிநவீன ஏர் இந்தியா ஒன் விமான பயணம் தொடக்கம்..! ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்..!

24 November 2020, 11:32 am
Ramnath_Govind_Inagurates_Air_India_One_UpdateNews360
Quick Share

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஏர் இந்தியா ஒன் – பி 777 விமானத்தில் முதல் பயணமாக சென்னைக்க்கு கிளம்பியுள்ளார். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க அவர், திருப்பதிக்கு வருகை தருவதாக ராஷ்டிரபதி பவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா ஒன் என்பது இந்தியாவின் விவிஐபிக்களான குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பயணம் செய்ய வாங்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருக்கும் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இது போல் இரண்டு விமானங்களை போயிங் நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு வாங்கியுள்ளது.

சமீபத்தில் இந்த விமானம் இந்தியா வந்தடைந்திருந்தாலும், கொரோனா காலம் என்பதால் தலைவர்கள் பயணம் செய்வதை தவிர்த்து வீடியோ கான்பெரன்ஸ் முறையில் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். இதனால் விமானத்தின் முதல் பயணம் நடைபெறாமலேயே இருந்தது.

இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வதால், ஏர் இந்தியா ஒன் முதல்முறையாக தனது சேவையைத் தொடங்கியுள்ளது.

“ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் விமான பயணம் இதுவாகும். விமானம் அதிக எரிபொருள் திறன் கொண்டது மற்றும் பி 747-400’ஐ விட நீண்ட தூரத்தைக் கொண்டுள்ளது. இவை விவிஐபி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன” என்று ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா ஒன்-பி 777 இன் தொடக்க விமான பயணத்தின் போது, அதிநவீன விமானங்களை இயக்குவதற்கும், வி.வி.ஐ.பி இயக்கங்களுக்கு உதவுவதற்கும் விமானிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப்படையின் முழுக் குழுவையும் ராம்நாத் கோவிந்த் பாராட்டினார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0