ஆந்திராவில் சத்சங் யோகா மையம் திறப்பு : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்!!
7 February 2021, 5:49 pmஆந்திரா : சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் சத்சங் ஆசிரம யோகா மையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
டெல்லியிலிருந்து பெங்களூர் வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் மூலம் மதனப்பள்ளி வந்தடைந்தார்.
அங்கு அவரை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். மதனப்பள்ளியில் உள்ள சத்சங் ஆசிரமத்திற்கு சென்ற அவர் அங்கு புதிதாக கட்டப்பட இருக்கும் சத்வா என்ற பெயரிலான மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து சத்சங் ஆசிரமத்தை சுற்றி பார்த்த ஜனாதிபதி, யோகா ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அங்கிருந்து புறப்பட்டு சதும் சென்ற ஜனாதிபதி, அங்குள்ள சர்வதேச தரத்திலான பீப்பில்ஸ் குரோ பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
0
0