‘இந்த புனித நாள் அனைவருக்கும் அமைதி, வளத்தை கொண்டு வரட்டும்’: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!!

14 April 2021, 11:32 am
Ramnath_Govind_Republic_Day_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் உள்ள இந்தியா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில், நேற்று கர்நாடக, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலம், தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் தங்கள் புத்தாண்டை கொண்டாடினர்.

இன்று தமிழ்நாடு, கேரளா, அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் புத்தாண்டை வரவேற்கின்றனர். தமிழ் புத்தாண்டிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 33

0

0