9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற பாதிரியார் : டிவிட்டரில் டிரெண்டாகும் #JusticeForDelhiCanttGirl

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 4:29 pm
Cantt Girl Justice - Updatenews360
Quick Share

டெல்லி : ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டெல்லியில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த குடும்பம் கண்டோன்மென்ட் பகுதியல் உள்ள சுடுகாட்டிற்கு அருகில் பூரண நங்கலில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று 9 வயது சிறுமி குடிநீர் எடுக்க சுடுகாட்டு அருகே சென்றவர் திரும்பி வரவேயில்லை. இந்த நிலையில் சிறுமியை தேடி சென்ற பெற்றோர்கள் குளிரூட்டி அருகே சிறுமி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் சிறுமி மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என பாதிரியார் ராதே ஷ்யாம் கூறியுள்ளார், மேலும் தகன மேடை ஊழியர்கள் சலீம், லட்சுமி நாராயண் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறுமி மின்சாரம் பாய்ந்து தான் இறந்தார் என கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்த நிலையில் உடனே சிறுமியின் உடலை எரித்து விட பாதிரியார் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் கூறியுள்ளனர். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் பிரேத பரிசோதனை செய்து உடல் உறுப்பை திருடிவிடுவர் என கூறினர். இதையடுத்து சிறுமியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்த நிலையில் சிறுமியின் உடலை எரிக்கும் போது, சிறுமியின் தாய் நீங்கள் ஏதோ தனது மகளை செய்துவிட்டீர்கள் என கூறியபடியே குழந்தையின் உடலை சோதித்தார். மேலும் குழந்தையின் மணிக்கட்டு மற்றும் கைகளில் காயம் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டன. சிறுமியின் உதடுகளும் நீல நிறத்தில் இருந்தன.

இதையடுத்து குழந்தையை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து நாடகமாடுவதாக சிறுமியின் தாய் குற்றம்சாட்டி அக்கம் பக்கத்தினரை அழைத்தார். இதையடுத்து சிறுமியின் உடலை எரித்த 4 பேரும் அங்கிருந்த தப்பி செல்ல, 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் சிறுமியின் சடலத்தை மீட்டு போலீசில் புகார் கொடுத்தனர்.

எஞ்சிய சடலத்தை வைத்து போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இணையத்தில் செய்திகள் வெளியானதும், #JusticeForDelhiCanttGirl என்ற ஹேஷ்டேக் உருவாக்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 321

0

1