புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் ஆய்வு

Author: Udhayakumar Raman
26 September 2021, 10:59 pm
Quick Share

டெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை நேரில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய உருவாக்கியுள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.889 கோடியாகும். முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். மேலும் கட்டுமான திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

Views: - 112

0

0