‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…!!

29 November 2020, 8:54 am
ModiMannKiBaat - updatenews360
Quick Share

புதுடெல்லி: மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது .

இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 71வது முறையாக உரையாற்றுகிறார். தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பண்டிகை காலம் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.

Views: - 18

0

0